தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் தளபதி விஜய். பிரபல இயக்குனரின் மகன் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்தாலும் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவரை தமிழகத்தின் நம்பர் 1 என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர். இதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது விஜய் படத்தை நடிக்க போகிறார். தளபதி விஜய்யின் கில்லி, சிவகாசி, திருப்பாச்சி என பல்வேறு குடும்ப பாங்கான கதைகளில் நடித்து மெகா ஹிட் கொடுத்துள்ளார்.
விஜய் தனது சினிமா பயணத்தில் பல ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதில் மிக முக்கியமான படம் விக்ரம், ஜோதிகா நடிப்பில் தரனி இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன தூள் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் தானாம். பிறகு தான் அதில் விக்ரம் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.