மூத்த முன்னணி பிரபலத்துடன் குக் வித் கோ மாளி ரித்திகா..! யாருடன் இருக்கிறார் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரலாற்றில் இதுவரை நடந்திராத புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது வைர்ல்டு கார்டு போட்டியாளராக நடிகை ஒருவர் களமிறங்கியுள்ளார். இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இப்படி வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் நுழைவது வழக்கம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி தொடரில் நடிக்கும் ரித்திகா என்ற நடிகை தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ளே நுழைந்துள்ளார்.

இவர் சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே அறிமுக நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஸ்பெஷல் பெர்பாமன்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் இந்த புரோமோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வேற லெவல் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக அளவு பார்வையாளர்களை கொண்டுள்ள சீரியலாக பாக்கியலட்சுமி விளங்கி வருகிறது.பல திருப்புமுனை கொண்டு நகர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலை மக்கள் ஆர்வத்துடன் கண்டு கழித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், இளம் நடிகை ரித்திகா.

இவர், ராஜா ராணி சீரியல் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

மேலும் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ரித்திகா, தமிழ் திரையுலகில் மூத்த முன்னணி பிரபலமாக விளங்கி வரும் நடிகரும்,

இயக்குனருமான பாக்யராஜ் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.