மூக்கு பொடி சித்தர் சொன்ன பின்பு தான் எல்லாம் கிடைத்தது! பிரபல நடிகர் தாடி பாலாஜி உருக்கம்!! – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழகத்தில் மூக்கு பொடி சித்தர் காலமானதால் அவரது சமாதியை வழிபட வந்த பிரபல நடிகர் தாடி பாலாஜி, அவரிடம் ஆசி பெற்ற பின்பு என வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்தது என்று உருக்கமாக கூறியுள்ளார். திருவண்ணாமலையில் இன்றளவும் பல சித்தர்கள் வலம் வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சித்தர்களின் புனிதா இடமாக கருதப்படும் இங்கு வாழ்ந்து வந்த மூக்கு பொடி சித்தர் சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

இவரிடம் ஆசி பெற்றால்போதும், நம்வாழ்க்கை அப்படியே மாறிப்போகும் என்று பலர் நம்புகின்றனர். குறிப்பாக தினகரன் எந்த ஒருமுடிவு எடுத்தாலும், இவரிடம்வந்து ஆசி பெற்ற பின்பு தான் அடுத்து அதைப் பற்றி சிந்திப்பார்.அவர் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும்இவரை பார்த்து செல்வதுண்டு.

 

இந்நிலையில் நேற்று முன் தினம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தன் நண்பர்களுடன் வந்த பிரபல நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, திருவண்ணாமலைக்கு வந்த போதுஒரு முறை மூக்கு பொடி சித்தரை சந்திக்க நேர்ந்தது.அவரிடம் ஆசி பெற்றுசென்றேன். அதன் பிறகு தான் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நேர்ந்தது.

உதாரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தேன். இதைத் தொடர்ந்து ஒரு படத்தில் கதாநாயகனாகவும், 2 படத்தில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறேன்.மூக்கு பொடி சித்தர் ஜீவசமாதி அடைந்த நாளில் என்னால் அவரை பார்க்க வர முடியவில்லை. அதனால் தற்போது சமாதியை வழி பட வந்ததாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.