முழுக்க முழுக்க வெள்ளைத் தங்கத்தில் செய்யப்பட்டுள்ள கைக்கடிகாரமா..! பிரபல நடிகையின் கணவன் அணிந்த கைக்கடிகாரமா விலை எவ்வளவு தெரியுமா?

பிரபல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகையின் கணவர் அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலையானது கேட்போர் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

இந்தியாவிலிருந்து ஹாலிவுட் திரையுலகில் முதன்முதலாக நடிகையாக சென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்தார். அமெரிக்காவில் நடித்துக்கொண்டு இருந்தபோது இவருக்கு அதை நாட்டை சேர்ந்த நடிகர் மற்றும் பாடகரான நிக் ஜோனாஸ் காதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் பீவர்லி ஹில்டனில் நடந்த கோல்டன் க்ளோப் விருது நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். அப்போது அங்கிருந்த அனைத்து பிரபலங்களும், நிக் ஜோனாஸ் கையில் கட்டியிருந்த கை கடிகாரத்தின் மீது கண்ணாக இருந்தனர். அந்த கை கடிகாரமானது அவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருந்தது.

அப்போதிலிருந்தே அந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு குறித்து பல்வேறு விதமான வதந்திகள் வெளிவந்தன. அந்த கைக்கடிகாரத்தில் ஏகப்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன என்பதும், கைகடிகாரம் முழுவதும் வெள்ளை தங்கத்தினால் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 192 பாகட் கட் வைரங்கள் அந்த கை கடிகாரத்தில் பதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

மேலும் இந்திய மதிப்பின்படி அந்த கைக்கடிகாரத்தின் விலையானது 7.5 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள மிக விலையுயர்ந்த கை கடிகாரங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.