முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் விசேஷம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வெளியிட்ட குடும்ப புகைப்படம்

ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். தற்போது தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக நடிகை ரம்யா கிருஷ்ணன் இருக்கிறார்.

படையப்பா படத்திற்கு அடுத்தப் படியாக இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் உள்ள இவரது ராஜமாத கதாபத்திரம் இவரை இந்திய அளவில் பிரபலமாகியது. பாகுபலியில் ராஜமாதா கதாபத்திரம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது. குயின் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தற்போது டிஜிட்டல் உலகிற்கு வந்துவிட்டார். இவரின் குயின் 2விற்காக பலரும் காத்திருக்கின்றனர். கொரோனாவால் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இன்று 50 ஆவது பிறந்தநாள். அவருது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

Queen’s Fab 50! ? #happybirthdayramyakrishnan #ramyakrishnan ❤

A post shared by Ramya Krishnan (@queenramyakrishnan) on

Leave a Reply

Your email address will not be published.