முன்னணி நடிகை த்ரிஷாவுக்கு கண்ணை கட்டிக் கொண்டு சப்ரைஸ் கொடுத்த இளைஞர்! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இயக்குனர் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து லேசா லேசா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இவர் கடைசியாக அஜித்தின் என்னை அறிந்தால், கமல்ஹாசனின் தூங்கா வனம், ஜெயம் ரவியின் பூலோகம், ரஜினியின் பேட்டை ஆகிய வெற்றி படங்களில் முன்னணி கதாநாயகனுடன் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்தற்கு நல்ல பாரட்டைப் பெற்றார். இந்நிலையில் பிரபல நடிகை த்ரிஷாவின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார் ஒரு இளைஞர். அதுவும் எப்படி தெரியுமா?

கண்களை கட்டிக்கொண்டு. ஆம், 52 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், 96 திரைப்படத்தின் பின்னணி இசையுடன், வெள்ளை போர்டில் போனாவால் த்ரிஷாவின் ஓவியத்தை தலைகீழாக வரைகிறார். இதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த த்ரிஷா, Love This Thank You So Much என குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளார். சிறிது நேரத்திலேயே வைரலான இந்த வீடியோவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.