தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இவரின் தம்பி கார்த்தி விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் வெளிவருவதாக இருந்தது.

தற்போது சூரரை போற்று படம் அமோசான் பிரைமில் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் வாடி வாசல் எனும் படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் சூர்யா நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது. சமீபத்தில் ஹாரி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருந்த அருவா படம் ட்ராப் ஆகிவிட்டது என சில வதந்திகள் பரவின.
இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக இயக்குனர் ஹரி சூர்யாவின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில் உங்களின் இந்த முடிவை மீண்டும் ஒருமுறை மரு பரிசீலனை செய்யுங்கள் என குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை ஒன்றே இவர்களின் பிரிவினையை உண்மை தான் என்று 90% சதவீதம் முடிவு செய்துள்ளது என்று கூட சொல்லலாம்.