தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. சந்திராமுகி, பில்லா, யாரடி நீ மோகினி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என அங்கேயும் தனது படங்கள் மூலம் வசூல் வேட்டை நடத்தியுள்ளார். ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் எஸ்.ஜெ. சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முதன் முறையாக அம்மனாக நடித்து வெளியாகவுள்ள படம் மூக்குத்தி அம்மன்.
கொரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தற்போது வரை தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது. இதனால் இப்படம் கண்டிப்பாக ஓடிடியில் வெளிவரும் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதனை உறுதிசெய்யும் விதத்தில் இப்படத்தில் பிரபல ஓடிடி நிறுமணமான ஹாட் ஸ்டார் ரூ. 20 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம். இதுமட்டுமின்றி மூக்குத்தி அம்மன் டப்பிங் ரைட்ஸ் உரிமையை சுமார் ரூ. 1 கோடியே 20 லட்சம் வரை விற்பனையாகி இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்படத்தை வரும் தீபாவளி அன்று ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவி இரண்டிலும் வெளியிட முடுவெடுத்தலாம் விஜய் தொலைக்காட்சி. இதனால் 2020ஆம் ஆண்டு தீபாவளிக்கு நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் விஜய் டிவி மற்றும் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.