முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோருக்கு முன்னாடியே ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. யார் அந்த மாஸ் நடிகர்?

80, 90களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த். ரஜினிகாந்துக்கு இப்பவும் அதே அளவு ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் படங்கள் பிரம்மாண்ட ஹிட்டடித்து வந்தது. ஆனால் இவர்களையும் அசைத்துப் பார்த்த சில நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். இவர்கள் படத்தை விட அவர்களது படங்களுக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்தனர்.

விஜயகாந்த், ராமராஜன் ஆகியோரை குறிப்பிட்டு சொல்லலாம். ஆனால் அவர்கள் தற்போது சினிமாவில் இல்லை. இப்போதும் கமல் ரஜினி ஆகிய இரு ஆளுமைகள் தமிழ் சினிமாவில் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட இவர்களையே ஒரு காலத்தில் தூக்கி சாப்பிட்டவர் என்றால் அது ராஜ்கிரண் தான். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவருக்கும் முன்னாடியே முதல் முறையாக தமிழ் சினிமாவில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகரும் இவர்தான்.

1996 ஆம் ஆண்டு ராஜ்கிரண், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவான மாணிக்கம் படத்திற்குத்தான் ஒரு கோடி சம்பளம் வாங்கினாராம். இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. என் ராசாவின் மனசிலே என்ற முதல் படத்திலேயே முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டவுசர் தெரிய வேட்டியை ஏத்தி கட்டி தொடையை தட்டி வந்தால் அன்றைய இளைஞர்களுக்கு அப்படி ஒரு கம்பீரம் வருமாம்.

Leave a Reply

Your email address will not be published.