முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..! 38 வயது அதிகமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! அந்த ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நாடிகளில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் அவருக்கு மகளாக நடித்துவருகிறார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசனுடன் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிதுள்ளாராம். கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து 2006-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதனை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் இந்தியன்2 படத்தை கைவசம் வைத்துள்ளார். இதன் படப்பிடிப்பை விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஊரடங்கு முடிந்த பின் கமல்ஹாசன் இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் படங்களை முடித்துவிட்டு வேட்டையாடு விளையாடு 2 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையாடு விளையாடு 2 படத்தில் 65 வயதை தாண்டிய கமல்ஹாசன் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய போது 40 வயதை நெருங்கிய நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது 27 வயதே ஆகும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு முடிந்ததும் வேட்டையாடு விளையாடு 2-ம் பாகத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் விவரம் வெளியாகும் என்று தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.