மெரினா மடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று வெற்றிக் கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாதா வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக விளங்குபவர்.
இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை. அதனை தொடர்ந்து இவர் டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். டாக்டர் திரைப்படத்தின் பாடல்களான செல்லமா மற்றும் நெஞ்சமே உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர் பவன் கல்யானுக்கு சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இதற்கு பவன் கல்யான் நன்றி தெரிவித்ததோடு, உங்களின் ஊத கலரு ரிப்பன் பாடலை எத்தனை முறையோ சலிக்காமல் கேட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். இதற்கு சிவகார்த்திகேயன் செம்ம சந்தோஷத்தில் பவன் கல்யானுக்கு ரீப்லேவின் நன்றி தெரிவித்துள்ளார். இதோ…