முத்தம் வாங்க புர்கா அணிந்து வந்த வாலிபர்..!! போலீசில் வசமாக சிக்கிய பரிதாபம்! காதலி என்ன செய்தாள் தெரியுமா? சென்னையில் அரங்கேறிய வினோத் சம்பவம்

செவ்வாய்க்கிழமை மாலையில் மெரினா கடற்கரையில் வழக்கம்போல் பொதுமக்கள் திரண்டு நேரத்தை கழித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காமராஜர் சாலையில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. காரணம் புர்கா அணிந்து இருந்த இளைஞரை பொதுமக்கள் சிலர் போலீசில் பிடித்துக் கொடுத்ததே ஆகும். புர்கா அணிந்துகொண்டு மக்கள் அனைவரையும் அவன் நோட்டமிட்டதாகவும், கொள்ளையன் ஆகவும் இருக்கக் கூடும் என்று பொதுமக்கள் கூறினார். இதையடுத்து திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் அவன் ஒப்படைக்கப்பட்டான். அவன் எதற்காக இவ்வாறு செய்தான் என்று விசாரிக்கையில் போலீசாருக்கு சற்று தலை சுற்ற ஆரம்பித்தது.

தாங்கள் நினைப்பது போல், தான் ஒன்றும் திருடன் அல்ல என்று கூறிய அந்த இளைஞன், தனது காதலி புர்கா அணிந்து கொண்டு ராயப்பேட்டை முதல் மெரினா வரை நடந்து சென்று வர முடியுமா? என்று சவால் விட்டதால் இவ்வாறு செய்ததாக அவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். அவ்வாறு ராயப்பேட்டை முதல் மெரினா வரை நடந்து வந்தால் முத்தம் தருவதாக காதலி கூறியதால் வந்ததாகவும், மெரினா வந்து காதலியை தேடிய போது மக்களிடம் மாட்டிக் கொண்டதாக கூறியுள்ளான். பிரச்சனை ஆனது தனது காதலி எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் அவன் வேதனையுடன் கூறியுள்ளான்.

அந்த இளைஞன் ஐடிஐ மாணவன் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். விசாரணை முடிவடைந்ததை அடுத்து இனிமேல் இதுபோன்று செய்யக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து அவனை போலீசார் விடுவித்தனர். இதில் சுவாரசியமான நிகழ்வு என்னவென்றால் அவன் பொதுமக்களிடம் சிக்கியது எப்படி என்பதுதான்.

விஜய் நடித்த போக்கிரி திரைப்படத்தில் விஜயை நோட்டம் இடுவதற்காக மாறுவேடத்தில் சென்று வடிவேலு பல்பு வாங்குவது போன்ற ஒரு காமெடி காட்சி வரும். அதேபோல் அனைத்தையும் சரியாக செய்த இந்த இளைஞன், காலுக்கு ஷூக்கள் அணிந்திருந்தான். இதைப் பார்த்து சந்தேகம் ஏற்பட்டு தான் அவனை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.