முத்தம் குடுக்குற இடமா அது..? விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாக இருக்கும் பெண்! யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம் !!!

நடிகர் விஷ்ணு விஷால் பின்னர் முண்டாசுப்பட்டி, குள்ளநரி கூட்டம் , ராட்சசன் போன்ற பல நல்ல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். அதிலும் அவர் நடித்த ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011ஆம் ஆண்டு தன்னுடன் படித்த ரஜினி நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

மனைவியை விட்டு பிரிந்து வாழும் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய கெரியரில் கவனம் செலுத்தப் போவதாகவும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைய போவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை அமலாபாலை நடிகர் விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் உலாவியது. ஆனால் அதை விஷ்ணு விஷால் மறுத்துவிட்டார்.

ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் தற்போது பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த புத்தாண்டை விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் இணைந்து கொண்டாடி இருக்கிறார் . அதுமட்டுமில்லாமல் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மூலம் விஷ்ணு விஷாலுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி இருக்கிறார் அதில் “மை பேபி, ஹாப்பி நியூ இயர் ” என்று எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.