முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்ட நடிகை காயத்ரி ரகுராம், மறுமணம் செய்து கொண்டு குழந்தை, குடும்பம் என வாழ ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார். பிரபல நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவருமான காயத்ரி ரகுராம் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு 22 வயதில் திருமணம் நடந்தது. பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம் தான் அது, ஏனோ எங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவில்லை.

இதனால் விவாகரத்து ஆனது, விவாகரத்து ஆன அந்த நாள்கள் எனக்குப் பெரும் வலியைக் கொடுத்திருந்தது. அதிலிருந்து மீண்டுவர ரொம்பவே கஷ்டப்பட்டேன். தற்போது அவருக்குக் கல்யாணம் ஆகி, குழந்தை இருக்குனு நினைக்கிறேன். தவறு என்பது ஒருத்தர் மேலேனு சொல்ல முடியாது. இரண்டு பக்கமும் இருந்திருக்கலாம். பல பெண்கள் இரண்டாவது திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்காங்க. என் திருமணத்திற்கான கதவுகளையும் யாரும் மூடி வைக்கவில்லை.
அதுக்காக, அதுதான் முக்கியம்னு நான் முன்னெடுக்கவும் இல்லை. நடந்துச்சுனா சந்தோஷம், அவ்வளவுதான்.அது என் அம்மாவோட ஆசை. நான் தனியாக இருப்பதில் சந்தோஷம்தான். அதே சமயம் எனக்குக் குழந்தை இருக்கணும்னு ஆசை. அதற்காகவாவது திருமணம் நடக்கணும் என உருக்கமாக கூறியுள்ளார்.