முதல் கணவருடன் வி வா கரத்து! பின்னர் 46 வயதில் பிறந்த குழந்தை.. நடிகை ஊர்வசியின் வாழ்க்கை பாதை

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். 2000-ம் ஆண்டு, மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை அவர் திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. கருத்து வேறுபாடு காரணமாக 2008-ம் ஆண்டு வி வா கரத்து பெற்றனர். இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை ஊர்வசி 2வது திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் அமைந்த விதம் சுவாரசியமானது.

அது குறித்து முன்னர் ஊர்வசி கூறுகையில், என்னுடைய கணவர் சிவபிரசாத் எங்களுடைய குடும்ப நண்பர். எங்கள் வீட்டில் சில நாட்களாகவே பிரச்சினை நிலவி கொண்டிருந்ததால் மன அமைதிக்காக ரமணாஸ்ரமத்தில் தங்கி சிறப்பு பூஜைகளும் செய்தோம். அப்போது பூசாரி என்னுடைய கணவர் என்று நினைத்து மாலையைக் கொண்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த சிவபிரசாத் மீது அணிவித்தார். என்னுடைய தாத்தா மாலையைக் கழட்ட வேணாம் அப்படியே இருக்கட்டும் என கூறினார்.

அதுவரை நாங்கள் இருவரும் எங்களுடைய திருமணத்தை பற்றி நினைக்கவே இல்லை, அது கடவுளே எங்களுக்கு ஆசீர்வதம் கொடுத்தது போல் இருந்தது. பின்னர் தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம் என கூறினார். பின்னர் தனது 46வது வயதில் ஊர்வசிக்கு கடந்த 2014ல் மகன் பிறந்தான். மகன் பிறந்த பிறகு என் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனது. அவனோட அழகான முகம், என்னை அப்படியே மாற்றிவிட்டது. எப்போதுமில்லாத அளவுக்கு இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published.