முதல் இரவில் சடலமாக மீட்கப்பட்ட புதுப்பெண்..! திருமண கோலத்தில் உயிர்போன பரிதாபம்…! மணப்பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்…!

பாகிஸ்தானில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்த கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது திருமணம் ஆனா அன்று இரவு புதிய தம்பதி இறந்து பூய் உள்ளனர்.. சவீரா என்ற இளம்பெண்ணுக்கும், வாசிம் என்ற இளைஞருக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதையடுத்து அன்று இரவு புதுமணத்தம்பதிகள் தங்களின் படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்தனர். குளிர் அதிகமாக இருந்ததால் இருவரும் சூட்டடுப்பில் நிலக்கரியை கொளுத்தினார்கள். ஆனால் அதை அணைக்க மறந்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறப்பட்டது.

 

இதையடுத்து காலையில் இருவரும் சுயநினைவின்றி கிடந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சவீரா ஏற்கனவே மூச்சுத்திணறி இறந்துவிட்டதாகவும், வாசிமுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி புதுப்பெண் சவீரா உடலில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை வாசிம் அடித்து கொன்றுவிட்டு நாடகம் ஆடுவதாக சவீராவின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து சவீரா மரணத்தில் மர்மம் இருப்பதாக பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  வாசிமிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணை முடிந்த பிறகு தான் தெரியும் இந்த சம்பவம் எப்படி அரங்கிரியுது என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!