முதலில் பையா படத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானா? யார்னு நீங்களே பாருங்க- புகைப்படம் இதோ!

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தனது முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பில் ரசிகர் மனதில் நீங்க இடம் பிடித்தவர். அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, கோ, சகுனி, மெட்ராஸ் போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கார்த்தி.

தமிழில் 2010ம் ஆண்டு லுங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் பையா. முழுக்க முழுக்க பயணம் செய்வதிலேயே கதை நகர்ந்துள்ளது. கார்த்தி-தமன்னா ஜோடி பெரிதாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது, அதோடு பாடல்கள் பற்றி கூறவே வேண்டாம். யுவனின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. இந்த பட அனுபவம் குறித்து லிங்குசாமி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அதில் அவர் பேசும்போது, இப்படத்தின் நாயகியாக நடிக்க வைக்க நயன்தாராவிடம் தான் பேசினோம். ஆனால் சம்பளம் பிரச்சனை காரணமாக அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை, அதன் பின்னரே தமன்னா கமிட்டானார். இப்போதும் நயன்தாராவுக்கு இப்படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. வருங்காலத்தில் நல்ல கதை அமைந்தால் நாங்கள் மீண்டும் இணைவோம் என்றிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *