முதலில் குஷி படத்தில் நடிக்கவிருந்தது இந்த நடிகை தானாம்.. யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர். தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் மூலம் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வளம் வருகிறாரா. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குஷி.

இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி அப்போது விஜய் தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்ததாகவும், இப்படத்தின் வெற்றியால் மீண்டும் முன்னணி நடிகராக மாறினார். இந்நிலையில் இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் நடிகை ஜோதிகா, இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காதல் காட்சிகள் தற்போது வரையில் ரசிகர்களால் ரசிக்க படுகிறது.

மேலும் நடிகை ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செயப்பட்டது, நடிகை சிம்ரன் தான். ஆம் வாலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து குஷி திரைப்படத்திலும் நடிக்க வைக்க எஸ்.ஜே.சூர்யா விரும்பினாராம். ஆனால் பின்னர் ஜோதிகா நடித்து இப்படத்திற்காக பிலிம் பேர் விருதை வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *