முதன் முறையாக வெளியான நடிகை தேவயானியின் மகள்கள் புகைப்படம்! எப்படி வளந்துட்டாங்க- நீங்களே பாருங்க!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை தேவயானி. விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. கல்லூரி வாசல் மற்றும் காதல் கோட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை தேவயானி. இவர் நடித்த அணைத்து படங்களிலுமே மிகவும் குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார்.

எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது கிடையாது. சினிமாவில் உயரத்தில் இருந்த தேவயானி தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் ராஜ்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார். அதன்பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற தொடரில் நாயகியாக நடித்தார்.

தற்போது பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்துவரும் நடிகை தேவயானி தற்போது ஒருசில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துவருகிறார். இந்நிலையில் இவருக்கு இனியா மற்றும் ப்ரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களால் வேகமாக பரவி வருகிறது. அதில் ஒருமகள் பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகை தேவயானி போலவே உள்ளார். இதோ அவர்களது புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published.