விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இவரின் நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர், சினிமாவில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார் நந்தினி.

நந்தினி மற்றும் சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து திருமணம் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள மைனா நந்தினிக்கு கடந்த 24ஆம் தேதி வளைகாப்பு நடைபெற்றது. தற்போது நடிகை மைனா நந்தினியின் கணவர் அவரின் குழந்தையின் கையின் புகைப்படத்தினை முதன் முறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மைனா மற்றும் யோகேஷ் தம்பதி முதல் குழந்தையை எதிர்நோக்கி இருந்த நிலையில் சமீபத்தில் மைனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் யோகேஸ்வரன் முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.