முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகும் சூர்யாவின் சூரரை போற்று படம்! எந்த சேனலில் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூர்யா. கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டதால், சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி அதிகளவிலான பார்வையாளர்களை பெற்றது.

இப்படம் ஏர் டெக்கான் விமான நிறுவனர் கோபி நாத் அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அபர்ணா முரளி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட் என மேலும் சிலர் நடித்துள்ளனர். மேலும் சூரரை போற்று திரைப்படம் தான் இந்த வருடம் ஓடிடியில் வெளியான திரைப்படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி சிறந்த விமர்சங்களை பெற்று சூரரை போற்று திரைப்படம் முதன்முறையாக தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. ஆம் சிங்கப்பூரை சேர்ந்த வசந்தம் என்ற தொலைக்காட்சியில் தான் சூரரை போற்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தற்போது அதன் ப்ரோமோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.