விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள் நடிகர் சிவகார்திகேயன், சந்தனம், ரோபோ சங்கர் அந்த வரிசையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் காமெடி ஷோவில் செய்யும் காமெடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு கிடைக்கும். தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட பெண்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா.

இவர் சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். சின்னத்திரையில் தோன்றி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் இவர் விஜய் தொலைக்காட்சியில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த போதே நிஷாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த சில நாட்களிலேயே அறந்தாங்கி நிஷா மீண்டும் தொகுப்பாளராக மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் களமிறங்கினர். இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது, இதுவரை குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிடவே இல்லை. தற்போது அவர் தனது கணவர், மகன், மகள் என தனது குடும்பத்துடன் சேர்த்து ஒரு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,