மீரா மிதுனை வறுத்தெடுத்த சனம் ஷெட்டி…! கொண்டாடும் ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார் மீரா மிதுன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அனைவரிடமிருந்தும் வெறுப்பை பெற்றார். இவர் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் உள்ளது என, விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை விமர்சித்து பேசி காணொளி வெளியிட்டுள்ளார். இதனையடுத்து மீரா மிதுன் சூர்யா, விஜய் மனைவிகளைக் குறித்தும் மிகவும் அவதூராக பேசியிருந்தார். இதற்கு விஜய்யின் நண்பரான சஞ்சீவ் ஒற்றை வார்த்தையில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். மீரா மிதுன், விஜய் பற்றியும் சூர்யா பற்றியும் வாரிசு நடிகர்கள் என விமர்சித்து வந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி அதிரடியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, மீராவை வெளுத்து வாங்கியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.