மீண்டும் 15 வருடத்திற்கு பிறகு மோதிக்கொள்ள போகும் ரஜினி மற்றும் கமல்! இந்த முறை வெற்றி யார் பக்கம்..!

தமிழ் சினிமாவில் எம். ஜி. ஆர்- சிவாஜி, ரஜினிகாந்த்- கமல்ஹாசன், விஜய்- அஜித், என காலமாற்றத்திற்கு ஏற்ப ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஆண்டிற்கும் மேலாக முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். இதுவரை பல முறை திரையுலகில் தங்களது படங்களின் மூலம் மோதிக்கொடுள்ளார்கள். அதிலும் மனிதன் – நாயகன், பாண்டியன் – தேவர் மகன், புன்னகை மன்னன் – மாவீரன் ஆகிய படங்கள் ஒன்றாக வெளிவந்து மோதிக்கொண்டதை நம்மால் மறக்க முடியுமா.

இவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மோதிக்கொண்ட படங்கள் என்றால் சந்திரமுகி – மும்பை எக்ஸ்பிரஸ் தான். இதில் கமல் ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. ஆனால் ரஜினியின் சந்திரமுகி ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. இந்நிலையில் மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் படமும், கமலின் படமும் ஒன்றாக மோதிக்கொள்ள போகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கி வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளிவரும் என கூறப்படுகிறது. அதே போல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் ” கமல் ஹாசன் 232 ” படமும் வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு தான் என்று அதிகாரப்பூர்வமாகவே வெளிவந்த போஸ்டரில் அறிவித்துவிட்டனர். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த முறை வெற்றி யார் பக்கம் என்று…

Leave a Reply

Your email address will not be published.