பிக்பாஸ் சீசன் 3ல் அறிமுகமனா லாஸ்லியா, இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. தமிழ் சினிமாவில் இவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பட வாய்ப்பிற்காக பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

இருப்பினும் கவின் மற்றும் லொஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இரு படங்களில் ஹீரோயினாக நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். ஹர்பஜன் சிங் உடன் ப்ரண்ட்ஷிப் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை லொஸ்லியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இந்நிலையில், ஊரடங்கில் அடிக்கடி இன்ஸ்டாகிரமில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றார். இறுதியாக வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து கிரங்கி போன ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி சமூகவலைத்தளத்தினை தெறிக்கவிட்டு வருகின்றனர்.