உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 4 பிரமாண்டமாக துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ரியோ ராஜ், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், ஆஜித் என 16 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் சென்ற வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், என்பது அனைவரும் அறிந்ததே.

அவரின் போகி பாஸ் வீட்டில் வந்ததுமே ஏகப்பட்ட சண்டைகள் ஆரம்பித்துவிட்டது. அதுமட்டுமின்றி நேற்று எலிமினேஷன் என்பதால் நடிகை ரேகா பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்ற பட்டார். இதனால் மற்ற போட்டியாளர்களும் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் டெய்லி டாஸ்க் என்று இன்று புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சுரேஷ் சக்ரவர்த்தி ரியோவிடம் எதையோ கூற மீண்டும் இருவருமிடையே வாக்குவாதம் வெடித்துள்ளது. இன்றைய ப்ரொமோவில் ஐந்து பேர் ஒரு பிரிவாகவும் மீதம் பதினோரு பேர் மற்றொரு பிரிவாகவும் இருக்கின்றனர். இறுதியில் ரியோ மேலே இருக்கிறவருக்கு வேற வேலை இல்லையா?… உங்களை மட்டும் கவனிச்சிட்டு இருப்பதா வேலை என்று சரமாரியாக சுரேஷை கூறியுள்ளார்.