தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. யதார்த்தமாக தன்னுடைய படங்களில் சமூக அக்கறைகளையும் சேர்த்து விடுவார் பாலா. அவர் இயக்கிய அனைத்துப் படங்களிலும் ஒரு விதமான ஈரம் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு படத்திலும் சென்டிமெண்ட் காட்சிகள் மக்கள் மனதில் ஆழமாக பதியும் அளவுக்கு திறமையாக அந்த நடிகர்களிடம் இருந்து நடிப்பை வெளிக்கொண்டு வந்திருப்பார்.

நடிகர் விக்ரம் மகன் துருவ்-ஐ தன்னை வைத்து சேது, பிதாமகன் படங்களை இயக்கிய இயக்குனரான நண்பர் பாலாவை கொண்டு வர்மா படத்தின் சினிமாவில் ஹீரோவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ஒரிஜினல் படமான அர்ஜூன் ரெட்டி போல் இல்லை என கூறப்பட்டு படம் நிறுத்தப்பட்டது. இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் இருக்க அர்ஜுன் ரெட்டி இயக்குனரை கொண்டு ஆதித்யா வர்மா என மீண்டும் படம் எடுக்கப்பட்டு வெளியான போதும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் பாலாவின் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர். தற்போது இப்படத்தை வரும் அக்டோபர் 6 ம் தேதி சிம்ப்லி சவுத் ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இதுகுறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.