மீண்டும் தமிழில் பிக்பாஸ் 4..! ஆவலுடன் எதிர்ப்பார்த்த அப்டேட் ப்ரோமோவுடன் வெளியானது.. குஷியில் ரசிகர்கள்!

கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட ஒன்றாகும். பிக் பாஸ்ஸின் மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் வராத பிரச்சனைகளே இல்லை. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஓடி நல்ல வெற்றியைப் பெற்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ எதிர்பார்த்து டிவி ரசிகர்கள், ரசிகைகள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்நேரம் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊடரங்கள் நிகழ்ச்சி படப்பிடிப்பு வேலைகள் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டன. அதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அண்மையில் இதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இதனையடுத்து தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பிற்கான படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டன. தெலுங்கு சினிமா பிரபல நடிகர் நாகார்ஜூனா மீண்டும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நடந்து வருகிறது, அதற்கான அறிவிப்பு எல்லாம் வந்துவிட்டது, இன்னும் தமிழ் மட்டுமே மீதம் இருந்தது. தற்போது தமிழுக்கும் அறிவிப்பு வந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published.