மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ராஜா பட நடிகை பிரியங்கா!! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படம் இதோ

தமிழில், ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் ஆகிய படங்களில் நடித்தவர் பிரியங்கா திவிவேதி. கன்னட நடிகர் உபேந்திராவை காதலித்து 2003-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 15 வருடங்களுக்கு பின், மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரியங்கா திரிவேதி. இவர் கடைசியாக அருண் விஜய் நடித்த ‘ஜனனம் படத்தில் கடந்த 2014 ஆண்டு நடித்தார்.

இதை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் பிரபலங்களான மகத், யாஷிகா ஆனந்த் இணைந்து நடித்து வரும் த்ரில் படத்தில் பிரியங்கா திரிவேதி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிப்பது குறித்து பிரியங்கா கூறியபோது, ‘சமீபத்தில் இந்த படத்தின் கதையையும் என்னுடைய கேரக்டரையும் கேட்டேன். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ளது.

மேலும் என்னுடைய கேரக்டரின் முக்கியத்தும் என்னை கவர்ந்ததால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டேன் என கூறியுள்ளார். அதே போல், தமிழ்ப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தமிழில் தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அதிகம் வந்து கொண்டிருப்பதாகவும் இதுவொரு ஆரோக்கியமான விஷயம் என்றும் பிரியங்கா தெரிவித்தார். இந்த படம் தமிழில் மட்டுமின்றி கன்னடத்திலும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.