மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகை ஜெனிலியா! வெளியான தகவல்-குஷியில் ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து கலக்கியவர் நடிகை ஜெனிலியா. குழந்தை தனமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர் ஜெனிலியா. தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இந்தியிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம்வந்தார். இவரும் ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். கடைசியாக அவரது நடிப்பில் தேரே நால் லவ் ஹோ இந்தி படம் வெளிவந்தது. இந்த நிலையில் மீண்டும் நடிக்க தயாராகி உள்ள ஜெனிலியா, “திருமணத்துக்கு பிறகு கணவருடன் நேரத்தை செலவிட முடிவு செய்ததால் நடிக்கவில்லை.

அதன்பிறகு குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பும் வந்தது. வீட்டில் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு படப்பிடிப்புக்கு சென்றால் கவனத்தை நடிப்பில் முழுமையாக செலுத்த முடியாது. அதனால்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்து விட்டேன். இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வருகிறேன். அதிக பட வாய்ப்புகளும் வருகின்றன. அம்மாவாக நடிக்க மாட்டேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!