கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இவருக்கு சுந்தரபாண்டியன் தான் முதல்படம். ஆனால் அதற்கு முன்பே கும்கி வந்துவிட்டது. சுந்தரபாண்டியனிலும் கோபக்கார பெண்ணாக அழகாக நடித்திருப்பார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த கும்கி படம் இவருக்கு வெற்றிகரமான படமாக அமைந்தது. கும்கி படத்திற்கு பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுருத்தண்ட, கொம்பன், வேதாளம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார்.
பொதுவாக தமிழ் சினிமாவில் கொஞ்சம் குண்டாக இருக்கும் நாயகிகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அந்தவகையில் லட்சுமி மேனனுக்கும் தமிழில் ரசிகர்கள் அதிகம். ஆனால் சில வருடங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை லட்சுமி மேனன், தமிழ் திரையுலகம் பக்கம் தலைகாட்டவில்லை. சமீபத்தில் விக்ரம் பிரபுவின் படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் எனும் செய்தி வெளியாகியது.
கொம்பன் படத்தை இயக்கி முத்தையா இப்படத்தை இயக்க சன் டிவி நிறுவத்துடன் இணைந்துள்ளனராம். இதற்கான பட பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை லட்சுமி மேனன்.
?I’m back ? pic.twitter.com/cmeWPK9luK
— Lakshmi Menon (@lakshmimenon967) October 18, 2020