தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சுதா இயக்கத்தில் தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று. இப்படம் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார் நடிகர் சூர்யா.

மேலும் இதற்கு முன்பு ஜோதிகாவின் நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பென்குயின் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட தெலுங்கு முன்னணி நடிகரான நாணி வில்லனாக மிரட்டி எடுத்த, வி திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த வரிசையில் தற்போது நடிகை அனுஷ்கா, நடிகர் மாதவன், அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள “நிசப்தம்“ படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பெரிய தொகைக்கு கைமாறி இருப்பதாகவும், அக்டோபர் மாதம் பெரிய அளவில் விளம்பரம் செய்து அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.