ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் ஜூலி. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் இடையில் பல சர்ச்சைகள் நடந்தன, இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன்பின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜூலி சில சின்னத்திரையிலும், வெள்ளித்திரையில் நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஜூலி சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர். இந்த லாக்டவுனில் மற்ற நடிகைகளை போல ஜூலியும் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்கள் ஈர்த்து வருகிறார் ஜூலி.
சமீப காலமாக வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படியான சூழலில் நடிகை ஜூலி மீண்டும் ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அதில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலையும், மார்டனாகவும் உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது ஜூலியா என்று புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.