ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் இடையில் பல சர்ச்சைகள் நடந்தன, இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்றிலிருந்து, இன்றுவரை அவர் என்ன செய்தாலும் நெட்டிசன்கள் மோசமாக கலாய்த்தும் திட்டியும் வருகின்றனர். ஆனால் அதனை சிறுதும் பொருட்படுத்தாத ஜூலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பயங்கர பிஸியாக உள்ளார். நடிகர் விமல் நடித்த மன்னர் வகையறா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
மேலும், எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது தனது சட்டை பட்டனை கழற்றி விட்டு மிகவும் கிளாமராக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பிக்பாஸ் ஜூலியா இது? ஏன் இப்படியெல்லாம் என விளாசி வருகின்றனர்.
“Optimism is the faith that leads to achievement. Nothing can be done without hope and confidence.” pic.twitter.com/J53u49tDEV
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) December 30, 2020