மீண்டும் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் S.P.B.. அவரது மனைவிக்கு கொரோனா! சோகத்தில் திரையுலகம்

எஸ்.பி.பாலசுப்ரமணி ஒரு இந்திய பின்னணி பாடகர், இசை இயக்குனர், நடிகர், டப்பிங் கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாள மொழிகளில் பணியாற்றுகிறார். 16 இந்திய மொழிகளில் 40000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் ஆகஸ்ட் 5-ஆம் திகதி சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

எஸ்பிபி-க்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும், ஆக்ஸிஜன் செறிவு சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் நேற்று ஆகஸ்ட் 13-ஆம் திகதி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 13-ஆம் திகதி நள்ளிரவு முதல் எஸ்பிபி-யின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக இன்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் உயர்மட்ட மருத்துவக்குழு வழங்கிய ஆலோசனையின் படி எஸ்பிபி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார் மற்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அவரது ஒட்டு மொத்த திரையுலகமே சோகத்தில் இருக்கும் நிலையில், தற்போது அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.