மிஸ் இந்தியா போட்டியில் சாதித்த ஆட்டோ ஓட்டுனர் மகள்! கஷ்டத்துக்கும், உழைப்புக்கும் பலன் கிடைத்ததாக உருக்கம்

ஏழை ஆட்டோ ஓட்டுனரின் மகள் ஒருவர் மிஸ் இந்தியா போட்டியில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ள நிலையில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் சிங். ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர் மகள் மன்யா சிங் தான் தற்போது மிஸ் இந்தியா போட்டியில் 2வது இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் ஹரியானாவை சேர்ந்த மனிகா முதலிடம் பிடித்துள்ளார்.

தன்னுடைய வெற்றி குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மன்யா சிங், தான் வாழ்க்கையில் சிறு வயதில் இருந்து பட்ட கஷ்டத்துக்கும், உழைப்புக்கும் தற்போது பலன் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். பல இரவுகள் தூ க் க மி ன்றி, உணவின்றி இருந்ததாகவும், புத்தக்கங்கள், ஆடைகள் வாங்கக்கூட பணம் இல்லாத நிலை இருந்ததாகவும் உ ரு க் க மாக கூறியுள்ளார்.

பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வீடுகளில் பாத்திரம் க ழு வியும், கா ல் செண்டரில் வேலை செய்தும் கல்வி பயின்று வந்த மன்யா சிங், விடாமுயற்சியால் மிஸ் இந்தியாவின் ரன்னர் அப் – ஆக தேர்வாகி சாதித்துள்ளார். அழகி போட்டிகளை பொறுத்தவரை தனக்கு முன் உதாரணமாக நடிகை பிரியங்கா சோப்ரா இருந்தார் என மன்யா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!