கட்டுப்பாடுகளை மீறி மிகவும் ஆபாசமாக உடையணிந்த பிரபல நடிகைக்கு கண்டனங்கள் எழுந்து 5ஆண்டுகள் சிறையில் அடைக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் பெண்கள் ஆடைகள் அணிவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகை ராணியா யூசஃப் என்பவர் ஆபாசமாக உடை அணிந்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் . சமீபத்தில் கெய்ரோ திரைப்படவிருது விழா நடைபெற்றது.அதில் பிரபல நடிகை ராணியா யூசஃப் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் கருப்பு நிறத்தில் தனது தொடைகள் தெரியும்படி மிகவும் ஆபாசமாக உடையணிந்து கலந்துகொண்டார்.
இந்நிலையில் ஆபாசமாக உடையணிந்து நடிகை எகிப்திய மக்களின் கலாசாரங்களை அவமதித்துவிட்டதாக கூறி, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என எகிப்து வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை ராணியா கூறுகையில், நான் இப்பொழுதுதான் முதல் முறையாக இதுபோன்ற ஆடையை அணிகிறேன், இந்த ஆடை மக்களிடம் இவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, இனி இதை போன்ற உடை அணியமாட்டேன், நான்செய்தது தவறுதான், என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.