பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் சென்ற வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், என்பது அனைவரும் அறிந்ததே. முதல் வாரம் அனிதா சுரேஷ் சக்கரவர்த்தி இடையே மோதல் ஏற்பட்டது. இரண்டாம் வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி ரியோ ராஜ் இடையே மோதல் ஏற்பட்டாலும்.

கேபிரியால தலைவர் போட்டிக்கு நின்றபோது சுரேஷ் செய்த காரியத்தால் அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், போட்டியில் சுவாரசியம் குறைவாக காணப்பட்ட போட்டியாளரான நடிகை ரேகா வெளியேறினார். நாளுக்கு நாள் நிகழ்ச்சியின் ஆரம்பம் என்னவோ பெரிய சண்டைகளுடன் இருந்தது. இப்போதும் இருக்கிறது ஆனால் அந்த அளவிற்கு இல்லை.
பிக்பாஸ் அடுத்தடுத்து மிகவும் வித்தியாசமாக டாஸ்க் கொடுத்து நிகழ்ச்சியை அமர்க்களம் செய்து வருகிறார். இன்று சில போட்டியாளர்களை அரக்கர்களும், அரக்கிகளாகவும், ரியோவை வடிவேலாகவும், வேல்முருகன் சிம்மாசனத்திலும் அமர்ந்திருக்கும் காட்சியினை ப்ரொமோவில் காணலாம். அரக்கர்களும், அரக்கிகளும் என்ன தொந்தரவு கொடுத்தாலும், உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருப்பார்களா?.. என்பது சற்று கேள்விக்குறியாகவே இருக்கின்றது.