மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை சோனியா அகர்வால்! புகைப்படம் உள்ளே..

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். செல்வராகவன் இயக்கிய இப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் அதன்பின் 7ஜி ரெயின்போ காலனி, தனுஷின் கோவில், தளபதி விஜய்யின் மதுர ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.

ஐடிஎஃப்ஏ சிறந்த புதிய நடிகை விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது. அதன்பின்னர் சினிமாவுக்கு சிறிது காலம் இடைவெளி விட்டார். வானம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து சதுரங்கம், ஒரு நடிகையின் வாக்கு மூலம், பாலக்காட்டு மாதவன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். மேலும் இவர் கடைசியாக அருன் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின் அவரின் தாயாக நடித்திருந்தார். இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த லாக் டவுனில் தான் மிகவும் ஸ்லிமாக மாறிய தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.