மிகப் பெரிய வெற்றி.. இந்த இரண்டு பேரை குறி வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதா? தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியானது

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய படையினர் நடத்திய தாக்குதல் மூலம் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பார்க்கப்பட்ட கைபர் பக்துன்வாகா முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவே தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், இன்று காலை அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் அந்த முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

பலாகோட், சாக்கோட், முஸாபராபாத் ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டனர். தாக்குதல் நடந்த பலாகோட் பகுதி மிக முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில்  ஆப்கனிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்வாகா மகாணத்தில் இந்தியாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் மட்டுமின்றி தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி இருந்த போது, அப்போது பதவி வகித்த ஷியா உல் ஹக் மலையுச்சியில் அடர்ந்த வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி தங்கள் நடவடிக்கைகளை தொடங்கினர்.

அவர் தீவிரவாதிகளுக்கு முழுமையான ஆதரவு அளித்ததால், அது தீவிரவாதிகளின் பயிற்சி முகாம், பதுங்குழிகள், ஆயுத குடோன்களாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஷியா உல் ஹக் இறந்த போதும், பலாகோட் தீவிரவாதிகளின் மிக முக்கிய பகுதியாகவே இருந்து வந்தது. இங்கிருந்து தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு எளிதாக செல்ல முடியும் என்பதால், இதை யாரும் கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக தீவிரவாதிகள் அதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.

தற்போது அது இந்திய விமானப்படையால் அழிக்கப்பட்டுள்ளதால், இது இந்திய விமானப்படையின் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்தியா இப்போது பலாகோட் முகாமை அழித்துள்ளதால், இது இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானுக்கும் பிரச்சனை தரும் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியிலும் பாகிஸ்தான் நாட்டிலும் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பல்வேறு புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டு வருகிறது. தற்போது இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.