இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படம் தளபதி விஜய்யின் 64வது படம் ஆகும். இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது திரையரங்குகள் அனைத்தை திறக்க அனுமதிக்கப் பட்டுள்ளதால் மாஸ்டர் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் இந்த வருடத்தில் வெளியாகப்போகும் புதிய படம். ஆனால் கொரோனா இரண்டாம் அலை வருகிறது என்கின்றனர், இதனால் என்ன ஆகும் என்பது தெரியவில்லை. படத்தின் பாடல்கள், டீஸர் வெளியான நிலையில் ரசிகர்கள் டிரைலருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் மாஸ்டர் படத்தின் ட்ரைலரில் விஜய் பேசும் வசனமெல்லாம் வரும் என கூறியிருந்தார்.
இதை வைத்து பார்க்கும் போது மாஸ்டர் படத்தின் ட்ரைலர் அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்தின் புத்தம் புதிய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. டிரைலர் வரும் என படக்குழுவினர் சிலர் கூறிவந்த நிலையில் இப்போது டிரைலர் கிடையாது என தகவல்கள் வருகின்றன. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்.