மாலா அக்காவா இது! மாடர்ன் பொண்ணா அழகா இருக்காங்களேபா!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடித்த ரெக்க படத்தில் மூலம் மிகவும் பிரபலமானவர் மாலா அக்கா என்கிற சிஜா ரோஸ்(Sija Rose). 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான கோழி கூவுது படத்தில் நாயகியாக நடித்தாலும் ரெக்க படத்தில் நடித்த மாலா கதாபாத்திரம் தான் அவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. படம் சரியாக போகவில்லை என்றாலும் சிஜா ரோஸ் கதாபாத்திரம்  இடம்பெற்ற ‘கண்ணம்மா  கண்ணம்மா’ பாடல்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.2016 பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. கன்னட சினிமாவில் அறிமுகமாகி மலையாளம் மற்றும் தமிழில் அறியப்படும் நாயகியாக வலம் வரும் சிஜா ரோஸ் படங்களில் நடிப்பதில் இருந்து கொஞ்சம் கேப் எடுத்துக் கொண்டார்.

இப்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் சிஜா ரோஸ், தனது மாடல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உள்ளது உலவ விட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.