மார்டன் உடையில் மாஸாக மாறிய நகைச்சுவை நடிகர் செந்தில்!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..

80 – 90 களில் நகைச்சுவை என்றாலே அனைவர் நினைவிருக்கும் வருவது கவுண்டமணி செந்தில் தான். இவர்களின் வாழைப்பழம் காமெடி இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது. இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பலருடன் நடித்துள்ளார். கவுண்டமணி செந்தில் இருவரும் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

கவுண்டமணி செந்தில் காமெடி காம்போ தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு காம்போ ஆகும். ஆம் இவர்கள் அளவிற்கு தற்போது வரை எந்த ஒரு காமெடி நடிகரும் பிறக்கவில்லை, ஏன் இனியும் பிறக்க போவது இல்லை. இதில் அடி கொடுத்து நகைச்சுவையாக பிரபலமானவர் கவுண்டமணி, ஆனால் அடி வாங்கியே ரசிகர்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்தவர் செந்தில். அவர் இன்றும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

காமெடி நடிகர் செந்திலின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. நடிகர் செந்தில் பிளாக் ஷீப் ஆரம்பிக்கவுள்ள ஆப் ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார். அதற்காக வித்யாசமான கெட்டப்பில் இருக்கிறார். குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் நம்ப செந்திலா இது என்று வாயடைத்து போயுள்ளனர். குறித்த புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.