தற்போது சினிமாவை விட சின்னத்திரை நடிகர்களும் இணைய வாசிகளும் மக்கள் மனதில் எளிதில் பதிந்துவிடுகின்றனர், இப்படி தற்போது டிவி தொடர்களையும் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்சிகளையும் பெண்கள் மட்டுமல்லாது அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றனர். சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி.
இதில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் என பல நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஓடுகிறது. இப்படி கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் பலர் உள்ளனர். இதில் கோமாளிகளாக புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி உள்ளிட்டோர் நம்மை மகிழ வைத்து வருகின்றனர்.
அதே போல் சமையல் செய்பவர்களின் வரிசையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் நடிகை பவித்ரா லட்சுமி. இவர் சில குறும் படங்களிலும், தற்போது மலையாளத்தில் ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குக் வித் கோமாளி பவித்தரவா இது என்று கேட்கும் அளவிற்கு மார்டன் உடையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
View this post on Instagram