மாயா படத்தில் பாபாவாக நடித்த குழந்தை யார் தெரியுமா?அட இந்த நடிகை தானா..! வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே மீண்டும் வளர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பிக்கின்றனர். இப்படி இவர்கள் நடித்து அந்த திரைப்படங்கள் வெற்றி அடைந்த பின்னும் மறைந்த நடிகை, ஆரம்பத்தில் குழந்தை நடிகையாக நடித்தது இவங்கதான என சொல்லுமளவிற்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள்  மத்தியிலும் ஆச்சரியம் அடைகின்றனர். தமிழ் சினிமாவில் குழந்தை  நட்சத்திரமாக பல நடிகர் நடிகைகள் நடித்து உள்ளனர்.

ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே தற்போது வரை ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளனர். அப்படி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் ஷீலா கவுர். இவர் தமிழ் சினிமாவில் பூவே உனக்காக,  நந்தா, கோல்மால் மற்றும் மாயா ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு அவர்கள் இளவட்டம், வீராசாமி, கண்ணாம் மற்றும் வேதா ஆகிய படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

இவர் 1996 இல் வெளியான விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் மீனா என்ற குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு நெப்போலியன், நக்மா நடித்த மாயா என்ற சாய்பாபாவின் பக்தி படத்தில் பையனாக நடித்தார். அதன்பின்னர் அஜித் நடித்த தீனா படத்திலும், சூர்யா நடித்த நந்தா படத்திலும்  தங்கையாக நடித்தார்.

இப்படி விஜய் அஜித் சூர்யா என்ற மூன்று முன்னணி நடிகர்களுடன் சிறுவயதிலேயே நடித்த பெருமை இவருக்கு உண்டு. இவர் நடித்த மாயா படத்திற்கு பிறகு கண்டிப்பாக இவர் சினிமாவில் ஹீரோயினாக வலம் வருவார் என்று மாயா படத்தை இயக்கிய ராமநாராயணன் கூறியிருந்தார்.

அது  நிஜமான வகையில் இவர் அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவிற்கு தம்பியாக நடித்த நாவதீப் நடிப்பில் வெளியான இளவட்டம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தார் ஆனால் அங்கும் ஒரு முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!