மாமா மேல எவ்வளவு பாசம்! தான் மாமாவுக்காக இந்த குழந்தை பண்றத பாருங்க.. பாசத்தால் உருகிடுவீங்க..!

குழந்தைகள் தான் இந்த உலகிலேயே கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அதேபோல் குழந்தைகள் மிகவும் பாசத்துக்கிரியவர்களாக இருப்பார்கள். இங்கேயும் அப்படிதான்.
குழந்தை ஒன்றுக்கு வீட்டில் சாப்பிட பிஸ்கட் கொடுத்துள்ளனர். அந்த பிஸ்கட்டை குழந்தை சாப்பிடத் துவங்கும்போது மாமன் வருகிறார். மாமாவுக்கு பிஸ்கட் தா எனக் கேட்கிறார். குழந்தை தன் கையில் இருக்கும் மூன்று பிஸ்கட்டில் 2 பிஸ்கட்டை மாமாவிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டது. மிச்சம் இருக்கும் ஒரு பிஸ்கட்டில் முதலில் பாதியை உடைத்துக் கொடுக்கிறது. தொடர்ந்து மாமா மறுபடியும் இன்னும் கொஞ்சம் எனக் கேட்க, மாமா பாவம் என சொல்லிக்கொண்டு இன்னும் கொஞ்சத்தை பிட்டுக் கொடுக்கிறது. மறுபடியும் மாமா, பிஸ்கட் கேட்க, கூடவே மாமா முக்கியமா? பிஸ்கட் முக்கியமா என்றும் கேட்க, குழந்தை மீதி கையில் இருந்த பிஸ்கட்டையும் தன் மாமாவிடமே கொடுக்கிறது. அடேங்கப்பா இந்தக் குழந்தைக்கு மாமா மேல எவ்வளவு பாசம்?

Leave a Reply

Your email address will not be published.