மாத்திரையை இரண்டாக உடைத்து சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா..! இனிமே அப்படி பண்ணாதீங்க..

சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலே மருத்துவமனைக்குச் செல்வதும், மாத்திரைகளை விழுங்குவதும் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விழுங்கும் மாத்திரைகளை பெரிதாக இருக்கிறதென்றோ அல்லது டோசேஜ் காரணத்தை சொல்லியோ இரண்டாக உடைத்து சாப்பிடுபவர்களா நீங்கள் அப்போ தொடர்ந்து வாசியுங்கள். மாத்திரைகளை முழுதாக சாப்பிடுவது தான் நல்லது. அதை இரண்டாக உடைப்பது தவறான செயல்.

அப்படிச் செய்வதால் சில நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய டோசேஜ் அளவுகள் மாறுபடும். இதயம், இரத்த அழுத்தம், கை நடுக்கத்திற்கான மாத்திரைகளை சாப்பிடுவோர் இதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாத்திரையின் தயாரிப்பும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்களின் அளவும் வேறுபடும். நாம் இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் தான் உடைபடும் என்றும் அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் சொல்ல முடியாது. வீரியமிக்க மருந்துகள் வயிற்றை பதம் பார்க்காமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும்.

முழுமையாக சாப்பிட்டால் தான் அவற்றின் பலன் கிடைக்கும். மாத்திரைகளை பிரித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். மாத்திரைகள் சில ஈரப்பதம் படக்கூடாது, காற்றில் வைக்ககூடாது என்றெல்லாம் இருக்கும். அவற்றை இரண்டாக்க போகிறேன் என வெளியில் நீண்ட நேரம் வைத்திருப்பதோ அல்லது இரண்டாக உடைக்க முடியாமல் இரண்டுக்கும் மேற்ப்பட்ட வடிவங்களில் உடைத்து மாத்திரையின் முக்கிய வேலையே சிதைந்துவிடும். மாத்திரைகளை இரண்டாக உடைப்பதை தவிர்த்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.