மாதுளம் பழத்துல இவ்வளவு நன்மைகள் இருக்க..! 10 நிமிடத்தில் நடக்கும் அதிசயம்!

மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. அப்படி மாதுளை நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம். விக்கல் நிக்க
மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் 10 நிமிடத்தில் நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும். உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள், நுரையீரல் மற்றும் குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

எலும்புகள் வலுப்பெற மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். இதனால் மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம். மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். இது மட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும். மாதுளம் பழத்தை அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.