மாணவியை கழுத்து அறுக்கப்பட்டு…! ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில்..!! இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன..???

கேரளா மாநிலத்தில் மிகவும் பதைபதைப்பை ஏற்படுத்த கூடிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்த சம்பவம் குறித்த பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. சம்பவத்தில் தொடர்புடைய  மாணவி அஷிகாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏபரல் மாதம் வெள்ளறட பொலிசாரின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. காரக்கோணம் பகுதியை சேர்ந்த 19 வயதான அஷிகா அரசு கல்லூரி ஒன்றில் பியூட்டிஷன் கோர்ஸ் படித்து வந்துள்ளார்.

அதே பகுதியில் அனு ஆட்டோ சாரதியாக உள்ளார். திங்களன்று பகல் சுமார் 11.30 மணியளவில் நண்பர் ஒருவரின் பைக்கில் அனு அஷிகாவின் குடியிருப்புக்கு சென்று இந்த சம்பவத்தை செய்துள்ளார். குடியிருப்புக்குள் பாய்ந்து சென்ற அனு, கதவை மூடிவிட்டு மறைத்து வைத்திருந்த சோடா பாட்டிலால்  அஷிகாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனையடுத்து தாமும் கழுத்தை அறுத்துக்கொள்ள முயன்றுள்ளார். அஷிகாவின் உறவினர்கள் மட்டுமே அப்போது குடியிருப்பில் இருந்துள்ளனர்.

அஷிகாவின் தாயாரும் தந்தையும் வேலை நிமித்தம் வெளியே சென்றிருந்தனர். குடியிருப்பில் இருந்து அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்று அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் அஷிகாவையும் அனுவையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனை செல்லும் வழியில் அஷிகா மரணமடைந்துள்ளார். அபாய கட்டத்தில் இருந்த அனுவை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ப்பித்தும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  உடற்கூராய்வுக்கு பின்னர் இருவரது சடலங்களையும் உறவினர்களுக்கு அளிக்கப்படும் என  தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைசெய் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *