தற்போது தமிழகத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. சொன்னதை செய்து காட்டிய பஞ்சாயத்து தலைவர். கும்மிடிப்பூண்டி ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவர் ஆனவர் திரு. ஆனந்தராஜ் அவர்கள். இவர் தேர்தலில் நிற்கும் முன் நான் வெற்றி பெற்றால் இந்த ஊராட்சிக்கு நல்லது செய்வேன் என்று வாக்குறுதி மக்களிடம் கூறி இருந்தார். அதன் பின் நடந்து முடிந்த ஊராட்சி தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

மக்களுக்கு நல்லது செய்வேன் என்று நிறைய பேர் கூறி இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் தான் சொன்னதை செய்கின்றனர். அந்த ஒரு சிலரில் ஆனந்தராஜ் அவர்களும் ஒருவர். அந்த ஊராட்சியில் உள்ள மாணவ மாணவிகள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று “கவரம்பேட்டை” எனும் ஊரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால் சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த ஆனந்தராஜ் அவர்கள் முதலில் அந்த ஊராட்சியில் மாணவர்களை விட அதிக சதவீதம் மாணவியர்கள் படிக்க வெகு தூரம் சென்று வருவதால்
பள்ளி மாணவிகளுக்காக தன் சொந்த செலவில் வேன் வாங்கி தந்துள்ளார். அந்த வேன் ஓட்டும் ஓட்டுனருக்கு மாதம் 12 ஆயிரம் தொகையை ஊதியமாக தனது சொந்த செலவில் ஏற்று கொண்டு உள்ளார். இந்த வேன் காலை இருமுறையும், மாலை இருமுறையும் இயங்குகிறது. இதனால் அப்பகுதி மாணவ மாணவிகள் இலவசமாக பாதுகாப்பாக பள்ளிக்கு தாமதம் இன்றி சென்று வருகின்றனர். இந்த செயலை கண்டு ஊர்மக்கள் மற்றும் அல்லாமல் சமூகவலைத்தளத்தில் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.